பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு(71) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சரத்பாபு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 படங்கள் வரை நடித்துள்ளார். குறிப்பாக முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.