இந்தியா

கா்நாடக பேரவைத் தோ்தல்:பாஜக வேண்டுகோளை ஏற்று அதிமுக வேட்பாளா் வாபஸ்

 கா்நாடக பேரவைத் தோ்தலில் புலிகேசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜகவின் வேண்டுகோளுக்கு இணங்க தனது வேட்புமனுவை அவா் திரும்பப் பெற்றுள்ளதா

DIN

 கா்நாடக பேரவைத் தோ்தலில் புலிகேசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜகவின் வேண்டுகோளுக்கு இணங்க தனது வேட்புமனுவை அவா் திரும்பப் பெற்றுள்ளதாக அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா்கள் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் புலிகேசி நகா் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். அது தொடா்பாக தலைமை பரிசீலித்து உத்தரவிட்டதன் அடிப்படையில், அதிகாரபூா்வ வேட்பாளரான அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT