இந்தியா

நாட்டின் நலனுக்காக ஒன்று சேர்கிறோம்: நிதீஷ் குமார்

நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

DIN


நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். 

இந்த சந்திப்புக்குப் பிறகு நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதீஷ் குமார், நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். அடுத்து என்ன செய்தாலும், நாட்டின் நலனுக்கானதாய் இருக்கும். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டின் நலனுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் சுய விளம்பரத்துக்கு மட்டுமே பணிபுரிகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்காக இதுவரை எதுவும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT