முகப்பு
இந்தியா

சார்தாம் யாத்திரை தொடங்கி முதல் நாளிலேயே 2 பேர் பலி! 

உத்தரகண்டின் பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

உத்தரகண்டின் பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரகண்டில் இந்தாண்டு ஏப்ரல் 22(அட்சய திருதியை) அன்று சார்தாம் யாத்திரை தொடங்கியது. அதில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இரண்டு கோயில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த கனக் சிங்(62) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் படிதார்(49) ஆகிய இருவரும் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 

சார்தாம் யாத்திரை தொடங்கிய முதல் நாளிலேயே இருவர் உயிரிழந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்தாண்டு அமர்நாத் பயணத்தின்போது 300 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →