இந்தியா

இந்த நிதியாண்டில் அதிக கடன் வாங்கத் தேவையில்லை: முதல்வர் பிரமோத் சாவந்த்

DIN

பனாஜி: நடப்பு நிதியாண்டில் கோவா மாநிலத்திற்கு போதுமான வருவாய் கிடைக்கும் என்பதால் கூடுதலாக கடன் வாங்க வேண்டியதில்லை என்றார் முதல்வர் பிரமோத் சாவந்த்.

வடக்கு கோவாவின் சால்-இப்ராம்பூர் கிராமத்தில் சப்போரா ஆற்றில் தடுப்பணை மற்றும் 250 எம்.எல்.டி நீர் வழங்கல் உந்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய பிறகு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் நிலையில், விவசாயம் மற்றும் தோட்டக்கலையை அதிகரிக்க இது ஊக்குவிக்கும். இதனால் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன்கள் தேவைப்படாத வகையில் வருவாய் ஈட்ட கடலோர மாநிலம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட கோவா அரசின் வரவு செலவுத் திட்டம் (2023-24), மாநிலத்தின் மிக முக்கியமாக சுரங்கத் தொழிலை மீண்டும் தொடங்குவதையே நம்பியிருப்பதைக் சுட்டிக் காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT