இந்தியா

தில்லியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசிய தலைநகர் மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தேசிய தலைநகர் மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி பப்ளிக் பள்ளியில் புதன்கிழமை காலை பள்ளி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அச்சுறுத்தலுக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டது. 

ஆனால் பள்ளி வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எந்தவித பொருளும் சிக்கவில்லை என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு செயலிழக்கும் படை, மோப்ப நாய் படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதி, தேசிய தலைநகரில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து புரளி எனத் தெரியவந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT