சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்திற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்திற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும் எனவும், கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிக் கொண்டிருந்த காவலர்கள் சென்ற வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர்.
.இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.