இந்தியா

கரோனா ஊரடங்கில் ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்

DIN

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் ரூ.97 லட்சமும், வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு ரூ.3 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதனை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார். புது பங்களாவை கேஜரிவால் கட்டவில்லை என்றும், ஏற்கெனவே இருந்த பழைய பங்களாவையே புதுப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

கேஜரிவால் குடியிருந்த பழைய வீட்டை மாநகராட்சி வாழத் தகுதியற்றது என்று அறிவித்திருந்ததால், கேஜரிவால் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT