இந்தியா

157 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

DIN

157 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து ரூ.1,570 கோடி செலவில் 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

நாட்டில் தரமான, சமமான, குறைந்த செலவில் செவிலியர் கல்வியை வழங்குவதும், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும்  நோக்கம் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செவிலியர் கல்லூரிகள் அமைக்க ரூ.1,570 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் அடுத்த 24 மாதங்களில் முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

தேசிய மருத்துவ சாதனக் கொள்கை 2023க்கு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT