தந்தை திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் லாலு பிரசாத் யாதவ் பல மாதங்களுக்குப் பிறகு இன்று பாட்னா திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் பிகார் திரும்பிய சில மணி நேரங்களிலேயே, அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ், பாட்னா தெருக்களில் சைக்கிளில் பயணித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது தந்தை (லாலு பிரசாத் யாதவ்) திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனால்தான், நான் சைக்கிள் ஓட்டுகிறேன்.
அதில் சவாரி செய்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பிகாரில் லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.