இந்தியா

பிரதமரை இழிவுபடுத்துபவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: அனுராக் தாக்குர்

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவதில் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே போட்டி நிலவுவதாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 

DIN

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவதில் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே போட்டி நிலவுவதாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மீதான இது போன்ற இழிவான விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதில் காங்கிரஸுக்கு கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் இருக்க வேண்டும். ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், அவர்களை இழிவுப்படுத்துவதும் முறையாகாது. தொடர் தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் அமைதியற்று காணப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே பிரதமர் மோடியை இவ்வாறு இழிவாகப் பேசி வருகிறார்கள். சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை மரணத்தின் வியாபாரி எனக் விமர்சித்திருந்தார். மற்ற தலைவர்கள் பிரதமர் அடிமட்டத்தைத் சேர்ந்தவர் என விமர்சித்தனர். சிலர் அவர் டீ விற்றவர் எனக் கேலி செய்தனர். மக்கள் இது போன்ற செயல்களுக்கு ஏற்கனவே தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்த முறையும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT