கோப்புப்படம் 
இந்தியா

3 நாள் அரசு முறை பயணமாக நாளை மாலத்தீவு செல்கிறார் ராஜ்நாத் சிங்!

மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை (மே 1) மாலத்தீவு செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

DIN


புதுதில்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை (மே 1) மாலத்தீவு செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதம், கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்ள இந்தியாவும் மாலத்தீவுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கொள்கை அடிப்படையில் 'அண்டை நாடு முதன்மை' கொள்கை மற்றும் மாலத்தீவின் 'இந்தியா முதன்மை' கொள்கையுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைக் கூட்டாக மேம்படுத்த இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூன்று நாள் (மே 1 முதல் 3) பயணமாக நாளை திங்கள்கிழமை மாலத்தீ செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த பயணத்தின் போது, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா அகமது திதி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தும் ராஜ்நாத் சிங், அதிபர் இப்ராஹிம் முகமது சோலியையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார். 

நட்பு நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் பங்குதாரர்களின் திறனை வளர்ப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ராஜ்நாத் சிங் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் கடற்படை தரையிறங்கு கப்பல் ஒன்றையும் பரிசாக வழங்க உள்ளார்.  

தற்போது அங்கு நடைபெற்று வரும் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு, புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடுகிறார். 

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவை மேம்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: வேதனை அளிக்கிறது - தில்லி முதல்வர்

விஜய் பிரசாரத்திற்கு 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்: ஏடிஜிபி விளக்கம்

கவர்ச்சி நடனத்தில் ரஷ்மிகா..! தம்மா முதல் பாடலின் டீசர்!

கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்

அழகிய தீண்டல்... பாவனி!

SCROLL FOR NEXT