தேர்தல் நெருங்கும் போதெல்லாம் பாஜக சதி, கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியாணா, மணிப்பூரில் வன்முறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
பாஜகவினர் திருப்திப்படுத்தும் அரசியலை மட்டுமே செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் போதேல்லாம் சதி, கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.
ஜூலை 31-ல் விஷ்வ இந்து பரிஷத்(பிஹெச்பி) ஊர்வலத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ஹரியாணாவின் நூஹ்வில் வெடித்த வகுப்புவாத வன்முறையில் இரு ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். இதுதொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சிறப்பாகச் செயல்படும், மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் குறைந்தபட்சம் 50 இடங்களையாவது கைபற்றும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.