இந்தியா

சுதந்திர நாள் விழா.. கொடிமரத்தின் விவரங்கள் தெரியுமா?

DIN

தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை இன்று (ஆக. 2) ஆய்வு செய்தார். 

சுதந்திர நாள் விழாவில் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அணிவகுப்பு ஒத்திகையும் தொடங்கவுள்ளது. 

கலைஞர் கருணாநிதியின், தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர நாளன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளன்று மாநில முதல்வர் கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர். 

கொடி மரத்தின் விவரங்கள்:

1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலே ஆளுநராக இருந்த ‘யேல்‘ என்பவரின் காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. இது மரத்தால் ஆனது.

மரக்கம்பம் பழுதடைந்ததால், 1994ல் 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் எல் & டி (L & T) நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.

கொடி கம்பத்தின் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.

கொடி கம்பத்தின் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT