ஞானவாபி மசூதி 
இந்தியா

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி!

ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு அலாகாபாத் உயா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

DIN

ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு அலாகாபாத் உயா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி பழைமையான ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு கோயில் இருந்ததா என்பதைக் கண்டறிய, மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் சிலா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த அந்த நீதிமன்றம், மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனிடையே மசூதியில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மசூதியை நிா்வகித்து வரும் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்புக்கு அனுமதி அளித்ததுடன், மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வசதியாக மசூதியில் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழுவினா் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி பிரிந்திக்கா் திவாகா் விசாரித்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், மசூதி நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேலும், மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT