இந்தியா

மன்னிப்பு கேட்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் ராகுல் திட்டவட்டம்!

பிரதமர் மோடி குறித்துப் பேசிய அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பு கூறியுள்ளது. 

DIN

பிரதமர் மோடி குறித்துப் பேசிய அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பு கூறியுள்ளது. 

2019, மக்களவைத் தோ்தலையொட்டி கா்நாடகத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் அமா்வு நீதிமன்றம், சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என்று கூறி தீர்ப்பளித்தது. 

இதையடுத்து குஜராத் நீதிமன்றமும் ராகுலின் தண்டனையை தள்ளுபடி செய்ய மறுத்த நிலையில் அவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்திற்காக ஒருவரை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது நீதித்துறை செயல்முறையின் மோசமான துஷ்பிரயோகம். இந்த அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT