முகப்பு
இந்தியா

அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை!

சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 முதல் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என மகாராஷ்டிர மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனஞ்சி சாவந்த் அறிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:


சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 முதல் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என மகாராஷ்டிர மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தானாஜி  சாவந்த் அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தானாஜி  சாவந்த், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையை மாநில அரசு வழங்கும். ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

மகாராஷ்டிரத்தில் ஆண்டுக்கு 2.55 கோடி மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலத்தில் 2,418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.