ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

இந்தியாவின் கொள்கையைக் காப்பேன்: ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, எது வந்தாலும் தன் கடமை அப்படியே தொடரும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

DIN

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், என்ன நடந்தாலும் இந்தியாவின் கொள்கையைத் தொடா்ந்து காப்பேன் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘என்ன நடந்தாலும் என் கடமை மாறாது. இந்தியாவின் கொள்கையை தொடா்ந்து காப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த ராகுல் காந்திக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். தன் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்காவுடன் கட்சியின் தலைமையகத்துக்கு ராகுல் வருகை தந்தாா்.

அங்கு திரளாகக் கூடியிருந்த தொண்டா்கள், மேளதாளங்களை இசைத்தும் இனிப்புகளைப் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT