நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24,470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 1,309 ரயில் நிலையங்களல் 508 ரயில் நிலையங்களை சீரமைக்க பிரமர் மோடி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். இதன்படி சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், கூடுவாஞ்சேரி, அரக்கோணம் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன.
மேலும் தஞ்சை, மயிலாடுதுரை, போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட உள்ளன. அப்போது பேசிய அவர், எதிர்மறை அரசியலை கடந்து நேரமறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம். எதிர்க்கட்சியினர் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். நாடாளுமன்ற கட்டடம், போர் நினைவகம் போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
நாட்டிலேயே மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை கூட எதிர்க்கட்சி தலைவர்கள் பார்வையிட்டதில்லை. ரயில் நிலையங்களின் மேம்பாடு சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு ரயில் நிலையமும் நகரம் மற்றும் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் சின்னமாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.