இந்தியா

ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள்: முதல்வர் கெலாட் தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று பிரிவுகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். 

DIN

ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று பிரிவுகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். 

புதிய மாவட்டத் தலைமையகத்தில் திறப்பு விழா நடைபெற்றது. பிர்லா அரங்கத்தில் காணொலிக் கட்சி வாயிலாக புதிய மாவட்டங்களின் தொடக்க விழாவில் முதல்வர் கெலாட் கலந்துகொண்டார். திறப்பு விழாவிற்கான பூஜையிலும் அவர் பங்கேற்றார். 

இந்த திறப்பு விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ராம்லால் ஜாட் கலந்துகொண்டார். 

17 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று புதிய பிரிவுகளை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இன்று திறக்கப்பட்டது. புதிய மாவட்டங்களுடன், மாநிலத்தில் மொத்தம் 50 மாவட்டங்களும், 10 பிரிவுகளும் உள்ளன. 

இதற்கு முன்னதாக 33 மாவட்டங்களும் எழு பிரிவுகளும் இருந்தன. ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஏற்கனவே இருந்ததால் 17 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 

மாநிலத்தின் புதிய மாவட்டங்களாக அனுப்கர், பலோத்ரா, பீவார், கெக்ரி, ஜெய்ப்பூர் ரூரல், டூடு, கோட்புட்லி-பெஹ்ரோர், நீம் கா தானா, கைர்தல்-திஜாரா, சஞ்சோர், தித்வானா-குச்சமன், ஷாபுரா, ஜோத்பூர் ரூரல், பலோடி, சாலம்பர், கங்காபூர் ரூரல் மற்றும் தீக் ஆகியவை ஆகும். 

தேர்தல் நடைபெறும் நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அரசியல் சூழலை தனக்கு சாதகமாக மாற்ற கெலாட் அரசு முற்சித்து வருவதாக கருத்துகளும் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT