முகப்பு
இந்தியா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இன்று காலை 11.54 மணியளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. 

பாதுகாப்பு நடவடிக்கையாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தீ கட்டுக்குள் வந்தாலும் புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.