இந்தியா

உத்தரபிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

DIN

உத்தர பிரதேச மாநிலம் சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னௌ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் போக்குவரத்தும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. 

பிரதமர் நரேந்திர மோடியின் ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கல்வீச்சு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) துணைக் குழு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தது.

தகவலை சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர், அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து பாரபங்கியின் ரயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்களிடம் விசாரணையை தொடங்கினர்.

கடந்த மாதம் அயோத்தியில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. 

வந்தே பாரத் ரயிலை கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி முதன் முதலில் தொடங்கி வைத்தாா். தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசின் முக்கிய ரயில்வே திட்டங்களில் ஒன்றாக வந்தே பாரத் முன்னிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாட்டின் சில இடங்களில் வந்தே பாரத் ரயிலைக் குறிவைத்து விஷமிகள் கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT