முகப்பு
யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
இந்தியா

பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: முதல்வர் யோகி ஆதித்யநாத் 

சட்டப்பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உ.பி. அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
பகிர்:

சட்டப்பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உ.பி. அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பொது மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து அனைத்து உறுப்பினர்களும் பேரவையை ஆரோக்கியமான விவாதத்தின் மையமாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். 

பேரவையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க தனது அரசு தயாராக உள்ளது.

மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்தால், வெள்ளம் மற்றும் வறட்சி குறித்தம் அவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

சட்டப்பேரவையை அர்த்தமுள்ள விவாதத்திற்கான மேடையாக மாற்ற மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →