இந்தியா

இணையவழி விளையாட்டுகள் மீதானவரி மூலம் அதிக வருவாய் கிடைக்கும்- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் (கேசினோ), குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தய தொகை மீது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதன் மூலம் அரசின் வரி வருவாய் வெகுவாக

DIN

இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் (கேசினோ), குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தய தொகை மீது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதன் மூலம் அரசின் வரி வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என்று மாநிலங்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இப்போது சூதாட்ட விடுதிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. குதிரைப் பந்தயத்தின் நுழைவுக் கட்டணம் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி இணையவழி விளையாட்டு, சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் ஆகியவற்றில் கட்டப்படும் மொத்த பந்தய தொகை மீது ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது அப்பிரிவில் இருந்து அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளாா்.

இணைய வழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் மீதான இந்த 28 சதவீத ஜிஎஸ்டி அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT