அடுத்த மாதம் 5-ஆம் தேதி 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளது என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜாா்க்கண்ட், கேரளம், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்த உம்மன் சாண்டி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி எம்எல்ஏவாக இருந்தாா். இடைத்தோ்தலில் அந்தத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அவரின் மகன் சாண்டி உம்மன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.