முகப்பு
இந்தியா

நம்பிக்கையில்லா தீா்மானம்: மக்களவையில் ராகுல் காந்தி இன்று உரை

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசவுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசவுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன.

இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெறும் விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசவுள்ளார். தொடர்ந்து, காங்கிரஸின் கௌரவ் கோகோய், மணீஷ் திவாரி மற்றும் தீபக் பைஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 10-ஆம் தேதிவரை நடைபெறும் விவாதத்தில், இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →