அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

தில்லி சேவைகள் மசோதா: காங்கிரஸுக்கு கேஜரிவால் நன்றி!

தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார். 

DIN

தில்லி சேவை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எம்.பி ராகுலுக்கு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நன்றியை தெரிவித்துள்ளார். 

தில்லி நிர்வாக சேவையைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தில்லி நிர்வாக திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

மாநிலங்களவையில் 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 102 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தில்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததற்காக கார்கே, ராகுலுக்கு "தில்லியில் உள்ள 2 கோடி மக்களின் சார்பாக" நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

பிக் பாஸ் 9: இரண்டாம் நாளே கைகலப்பு! என்ன நடந்தது?

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் படுகாயம்!

கேஜரிவாலுக்கு அரசு இல்லத்தை ஒதுக்கியது மத்திய அரசு!

விழி பாயும் மனம் பாயும்... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT