துஷார் காந்தி 
இந்தியா

காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கைது!

மும்பையில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

DIN

மும்பை: மும்பையில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஆகஸ்ட் புரட்சி மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட துஷார் காந்தியை காவல்துறையினர் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள துஷார் காந்தி, “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற என்னை காவல்துறை தடுப்பு காவலில் வைத்துள்ளது. இந்த வரலாற்று நாளில் எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு மணிநேரத்துக்கு பிறகு நிகழ்வில் கலந்துகொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்ததாக துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாரஷ்டிர முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியும், அதே பகுதியில் நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT