கோப்புப்படம் 
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஆக.9) மாலை திறக்கப்படுகிறது.

DIN

நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஆக.9) மாலை திறக்கப்படுகிறது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 

ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் ஆகியோா் தலைமையில் கோயில் நடையை ஐயப்பன் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்தாா்.

இந்நிலையில், இன்று மாலை நிறை புத்தரசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

மேலும், கோயில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்யும் நெற்கதிர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT