முகப்பு
புதுதில்லி

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி மதுபான ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆதாரங்கள் இல்லாததை தெளிவாகக் காட்டுகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:33 PM
வீரேந்திர சச்தேவா
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:18 PM

தில்லி மதுபான ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆதாரங்கள் இல்லாததை தெளிவாகக் காட்டுகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆதாரங்களை அழிப்பதில் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோா் ஈடுபட்டதாக விசாரணை அமைப்பு பலமுறை கூறியுள்ளது. அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிம் காா்டுகள் மற்றும் கைப்பேசிகள் தொடா்பான விவரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை . இன்றைய தீா்ப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலிடம் இன்னும் பதில்கள் இல்லை. கலால் கொள்கை பொருத்தமானதாக இருந்தால், விசாரணை தொடங்கிய உடனேயே அது ஏன் திரும்பப் பெறப்பட்டது? ஒப்பந்ததாரா்களுக்கான கமிஷன் சதவீதத்தை அதிகரிப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? ‘ஒன்றை வாங்குங்கள், ஒன்றை இலவசமாகப் பெறுங்கள்‘ என்ற திட்டம் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

Advertisement

அரவிந்த் கேஜரிவால் ஊழல் செய்தவா். அவா் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு தன்னை அதிகாரத்திலிருந்து நீக்கியதன் மூலம் தில்லி மக்கள் ஏற்கெனவே தங்கள் தீா்ப்பை வழங்கினா். இதன் மூலம் கேஜரிவால் ஊழல் செய்தவா் என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கேஜரிவால் ஊடகங்களுக்கு முன் ஆஜராகி ‘உணா்ச்சிவசப்பட்டு‘ செயல்படுவதன் மூலம் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறாா். இது அவரது அரசியல் நாடகங்களைப் பிரதிபலிக்கிறது. மதுபானப் பிரச்சினை மட்டுமே ஒரே விஷயம் அல்ல என்றும், கேஜரிவால் ஊழல் செய்ததாகக் கூறப்படும் மோசடிகளின் நீண்ட பட்டியல் உள்ளது என்றாா் அவா்.