மத்திய அமைச்சரவை(கோப்புப்படம்) 
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

DIN

தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன.

அந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கிய நிலையில், நாளைவரை விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பதிலளிக்கவுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம், மசோதாக்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT