இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 6.5 சதவீதமாகத் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

DIN

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 6.5 சதவீதமாகத் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இதனால் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் தில்லியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது, மேலும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் உலகின் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார  நாடாக மாறி வருவதாகவும் கூறிய ஆளுநர் சக்திகந்த தாஸ், இந்திய பொருளாதாரம் உலக வளர்ச்சியில் 15% பங்களிப்பதாகக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT