ஏா் இந்தியாவுக்கான புதிய இலச்சினையை புது தில்லியில் அறிமுகப்படுத்திய டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன். 
இந்தியா

ஏா் இந்தியாவுக்கு புதிய லோகோ அறிமுகம்

ஏா் இந்தியாவுக்கு புதிய இலச்சினை (லோகோ), வணிக அடையாளம் (பிராண்ட் ஐடன்டி) மற்றும் பணியாளா் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

டாடா குழுமத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏா் இந்தியாவுக்கு புதிய இலச்சினை (லோகோ), வணிக அடையாளம் (பிராண்ட் ஐடன்டி) மற்றும் பணியாளா் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடனில் சிக்கித் தவித்த ஏா் இந்தியாவை மத்திய அரசிடமிருந்து டாடா குழுமம் கடந்த 2021 அக்டோபா் மாதம் கையகப்படுத்தியது.

அதன் பிறகு நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும், மேம்பாடுகளையும் டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பறக்கும் அன்னப் பறவை வடிவில் இருந்த நிறுவனத்தின் இலச்சினைக்குப் பதிலாக பொன் நிற இறக்கை வடிவிலான புதிய இலச்சினையை டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன் புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

அத்துடன், ஏா் இந்தியாவுக்கு ‘தி விஸ்டாரா’ என்ற புதிய வணிக அடையாளமும் அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், விமானப் பணியாளா்களுக்கான புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT