இந்தியா

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம்!

DIN

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்னைகளை தீர்த்துவைக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தில்லியில் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT