இந்தியா

ஆக.10 வரை நேரடி வரி வசூல் ரூ.6.53 லட்சம் கோடி

நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.6.53 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

DIN

நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.6.53 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் நிதியாண்டில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை, மொத்த நேரடி வரி வசூல் ரூ.6.53 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15.73 சதவீதம் அதிகம்.

இதேபோல நிகர நேரடி வரி வசூல் ரூ.5.84 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.33 சதவீதம் அதிகம். இது நிகழ் நிதியாண்டு பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நேரடி வரி வசூலில் 32.03 சதவீதமாகும்.

கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை, வசூலிக்கப்பட்ட வரியில் ரூ.69,000 கோடி திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 3.73 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

SCROLL FOR NEXT