முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

லக்னௌ: நிறுத்தப்பட்டிருந்த காரில் இளம்பெண் சடலம்

லக்னோவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒடிசாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இந்தியா

லக்னௌ: நிறுத்தப்பட்டிருந்த காரில் இளம்பெண் சடலம்

லக்னோவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒடிசாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
கோப்புப்படம்
பகிர்:

லக்னோவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒடிசாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள விருந்தாவன் காலனி பகுதியில் நீர்த்தேக்க தொட்டியின் அருகே முட்புதர்களில் கார் ஒன்று கேட்பாரற்து நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்கள் பந்ததை எடுக்க கார் அருகே சென்றுள்ளனர்.

காரின் பின்புற இருக்கையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

உடனே இதுதொடர்காக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலம் அருகே இரண்டு செல்போன்களை மீட்ட காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இளம்பெண் புவனேஸ்வரில் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்தினர்.

காரின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுகொண்டதாகவும், ஆனால் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்றும் காவல் அதிகாரி ஒருவர் கூறினார். 

இளம் பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே இளம்பெண்ணுடன் இருந்த கான்பூர் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் வாகனத்தில் இருந்து அவரது செல்போன் மற்றும் ஆவணங்களும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →