முகப்பு
இந்தியா

அமர்நாத்: வாரத்தில் 3 நாள்கள் மட்டும் சுவாமி தரிசனம்!

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால் ஒரு நாள் விட்டு ஒருநாள் மட்டும் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
கோப்புப் படம்.
பகிர்:

அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால்  ஒரு நாள் விட்டு ஒருநாள்(அதாவது மாற்று நாள்களில்) மட்டும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை 4.30 லட்சம் பயணிகள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை 1,600-க்கும் மேற்பட்டார் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனர். 736 ஆண்கள், 151 பெண்கள், 25 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் உள்பட 915 பயணிகள் கொண்ட குழு பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றனர். 

62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →