தலைநகருக்கு அருகிலுள்ள புனித யாத்திரை தலங்களுக்கு சொகுசு பேருந்துகளில் மூத்த குடிமக்களை அனுப்புவது குறித்து தில்லி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள துவாரகதீஷ் கோயிலுக்கு யாத்திரை செல்லும் குழுவினரை தியாகராஜ் மைதானத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று சந்தித்தார். அப்போது தில்லிக்கும், நாட்டிற்கும் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, முக்ய மந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 72 ரயில்கள் மூலம் தில்லியில் இருந்து 71,000க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை சென்றுள்ளனர். தில்லியில் உள்ள ஒவ்வொரு வயதான நபரும் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனால் சில நேரங்களில் ரயில்கள் கிடைக்காது. எனவே, அயோத்தி போன்ற அருகிலுள்ள புனிதத் தலங்களுக்கு மக்களை அனுப்ப சொகுசுப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.