இந்தியா

கனமழை: ஹிமாசலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக ஹிமாசல் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

DIN

கனமழை காரணமாக ஹிமாசல் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்காக மூடப்பட்ட சிம்லா-சண்டிகர் சாலை உட்பட பல சாலைகள் தடைப்பட்டுள்ளன. ஜடோன் கிராமத்தில் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் பலியானார்கள். மேலும் 3 பேரை காணவில்லை. 
இதனிடையே தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி(இன்று) திட்டமிடப்பட்ட அனைத்து முதுகலை வகுப்புகளின் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இந்த முடிவை எடுத்துள்ளார். 
மேலும் முதல்வரின் உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க கல்வித்துறை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
நிர்வாக ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை சீராக பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT