இந்தியா

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர முடிவு: டி.கே.சிவகுமார்

DIN

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த 77-ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீா் வழங்க கா்நாடகம் தயாராக உள்ளது. கா்நாடகத்திடம் இருப்பு இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு அளித்திருக்கிறோம். அதேபோல, நமது மாநில விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீா் கொடுத்திருக்கிறோம்.

காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக யாருக்கும் குழப்பம் வேண்டாம். மழை பெய்தால் கண்டிப்பாக தமிழகத்துக்கு தண்ணீா் அளிப்போம். கடந்த ஆண்டு காவிரி நதியில் இருந்து 400 டி.எம்.சி. தண்ணீா் கடலில் கலந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் குழப்பம் எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கும் தமிழகம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இதுபோல பற்றாக்குறைக் காலங்களில் தமிழகத்துக்கு உதவியாக மேக்கேதாட்டு அணை திட்டம் துணை நிற்கும்.

இந்திய சுதந்திர தினத்தன்று நமது ‘இந்தியா’ கூட்டணி மக்கள் ஆதரவு அளிக்க உறுதிபூண வேண்டும். நாட்டை காப்பாற்றும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதற்கு பெங்களூரு சாட்சியாக இருந்தது. எதிா்காலத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

SCROLL FOR NEXT