ரஜினியின் மகனாக நடிக்கும் பாசில் ஜோசஃப்?
ரஜினியின் புதிய திரைப்பட நடிகர்கள் குறித்து...
நடிகர் பாசில் ஜோசஃப் நடிகர் ரஜினிகாந்துக்கு மகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி இயக்குநர், நடிகராக இருப்பவர் பாசில் ஜோசஃப். மின்னல் முரளி இயக்குநரான இவர் நடிகராகவும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். ஜெய ஜெய ஜெய ஹே, ஃபலிமி, குருவாயூர் அம்பலநடையில் ஆகிய திரைப்படங்கள் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கலக்கின.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், சிறிய கதாபாத்திரம் என்பதால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் - 173 திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்க பாசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
actor basil joseph might be in rajinikanth 173 movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.