ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் ரிஷிகாந்த்!
ராம் சரண் திரைப்படத்தில் ரிஷிகாந்த்...
நடிகர் ரிஷிகாந்த் நடிகர் ராம் சரண் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
ராம் சரணின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அண்மையில், இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இதில், ராம் சரணின் தந்தை சிரஞ்சீவியும் கலந்துகொண்டார்.
ரங்கஸ்தலம் திரைப்படத்திற்குப் பின் ராம் சரணும் சுகுமாரும் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைவதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமார் புஷ்பா, புஷ்பா - 2 ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் ரிஷிகாந்த் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத ராத்திரி, டோரதி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனிக்கப்பட்ட ரிஷிகாந்த் தெலுங்கில் வில்லனாக நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.