ராம் சரண் படத்தை இயக்கும் சுகுமார்..! 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி!
நடிகர் ராம் சரணின் 17ஆவது படத்தை இயக்கும் சுகுமார் குறித்து...
நடிகர் ராம் சரணின் 17ஆவது படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
முன்னதாக, 2018ல் ரங்கஸ்தலம் என்ற படத்தில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் காது கேளாதவர் கதாபாத்திரத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படம் தேசிய விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
கடைசியாக புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி என்ற படத்தில் ராம் சரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதாக சர்ச்சையானது.
Advertisement
Advertisement
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில், சுகுமார் இயக்கத்தில் ’ஆர்சி 17’ என்ற படத்தில் ராம் சரண் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் கடைசியாக புஷ்பா 2 படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் இரண்டு பாகங்களும் தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தன.
ராம் சரணுடன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள சுகுமார், பிளாக்பஸ்டர் வெற்றியைத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ராம் சரண் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Ram Charan 17th film directed by Sukumar, after 8 years both joined together
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.