முகப்பு
இந்தியா

ஒவ்வொருவருக்கு சிறந்த கல்வி அளிக்க உறுதிமொழி எடுப்போம்: கேஜரிவால்

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கல்வியை வழங்க உறுதிமொழி எடுக்குமாறு அனைத்து நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் அனைத்து வளர்ந்த நாடுகளைப் போலவே நானும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உழைத்து வருவதாகவும் அவர் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

பல வளர்ந்த நாடுகளுக்குச் சென்றதாகவும், மற்ற அனைத்தையும் தவிர அவர்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் உலகத் தரம் வாய்ந்ததாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக விளங்குவதையும் தான் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். 

நாம் ஒன்றாக இணைந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்... ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →