இந்தியா

காங்கிரஸ் தலைமையகத்தில் கொடியேற்றினார் கார்கே!

சுதந்திர நாளையொட்டி காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றினார்.

DIN

சுதந்திர நாளையொட்டி காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றினார். 

நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள்  தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்ச்சியில் தேசியக்கொடியேற்றினார். 

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய கார்கே, 'ஜனநாயகமும் அரசியலமைப்பும் நமது நாட்டின் ஆன்மா. இந்த சுதந்திர தினத்தில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT