சந்திரசேகர் ராவ் 
இந்தியா

தெலங்கானா தேர்தல்: பிஆர்எஸ்ஸின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ராஷ்டிர சமிதி இன்று வெளியிட்டுள்ளது. 

DIN

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ராஷ்டிர சமிதி இன்று வெளியிட்டுள்ளது. 

தெலங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

முதல்வர் சந்திரசேகர் ராவ், மாநிலத்தின் கஜ்வெல், கமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 7 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வாராங்கலில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர  தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT