இந்தியா

கேரள எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் கேரள எம்.எல்.ஏ மொய்தீனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் கேரள எம்.எல்.ஏ மொய்தீனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஏ.சி.மொய்தீனுக்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் சிலரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபெடரல் ஏஜென்சி மாநிலத்தில் சுமார் 6-க்கும் மேற்பட்ட  வளாகங்களை உள்ளடக்கியது.

உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரான மொய்தீன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களிடம் பினாமி சொத்து விவரங்களைச் சேகரித்ததற்கான ஆதாரங்கள் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT