இந்தியா

ஜி 20 மாநாடு: 3 நாள்கள் மத்திய அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிப்பு!

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு தேசிய தலைநகரில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செப்டம்பர் 8 முதல் 10 வரை மூடப்படும் என்று பணியாளர் அமைச்சகம் இன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு தேசிய தலைநகரில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செப்டம்பர் 8 முதல் 10 வரை மூடப்படும் என்று பணியாளர் அமைச்சகம் இன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் அளவு மற்றும் அதில் உள்ள கணிசமான தளவாட ஏற்பாடுகளை அங்கீகரித்து, தில்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு தில்லியில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களை செப்டம்பர் 8, 2023 முதல் செப்டம்பர் 10, 2023 வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

SCROLL FOR NEXT