இந்தியா

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவு!

பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். 

DIN

பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். 

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு புதன்கிழமை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக ஒப்பந்தம் செய்துள்ளனர். 

இந்த உறுப்பினர் சேர்க்கை ஜனவரி 1,2024 முதல் கூட்டமைப்பில் இணைகின்றனர். 

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரும் ஆறு நாடுகளையும் வரவேற்பதாகவும், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒவ்வொரு நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய உறவும், வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் நாடுகளைச் சேர்ப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

காலாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகள் திறப்பு

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

மேட்டூர் அணை நிலவரம்

SCROLL FOR NEXT