சோனியா காந்தி 
இந்தியா

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி வாழ்த்து!

சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN

சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்,  

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். 

அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. இஸ்ரோ மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. 

நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கி வெற்றிகண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

விழிகளால் பேசு... ஹூமா குரேஷி

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

SCROLL FOR NEXT